Thursday, July 31, 2014

தமிழ் விழுமியங்கள் சின்னத்திற்கான விளக்கம்

உலகில் எப்பொழுது மனித இனம் தோன்றியதோ அப்பொழுதே தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழி.

இதை,
"கல்த் தோன்றி மண்த் தோன்றாக் காலத்தே தோன்றிய 
மூத்தக் குடி நம் தமிழ் குடி"

உலகில் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் பலவேறு மொழிகள் பேசப்பட்டாலும் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)

இந்தச் சின்னத்தில் அடங்கியவைகள்:

      அ. கன்னியாகுமரியிலுள்ள 131 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை
      ஆ. தமிழ்நாடு அரசு பறவை : மரகதப் புறா
       இ. தமிழ்நாடு அரசு மரம் : பனை மரம்
       ஈ. தமிழ்நாடு அரசு கோபுரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்
       உ. தமிழ்நாடு அரசு மலர் : செங்காந்தள் மலர்
       ஊ. முத்தமிழைக் குறிக்கும் இயல், இசை மற்றும் 
               நாடகம் (வீணை, மங்கையின் பரதநாட்டியம்) 

Sunday, July 27, 2014

பிறப்பு அன்னையால்! சிறப்பு கல்வியால்! பெருமை தமிழன் என்பதால்!

பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்! பாரீஸ்: திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் நாட்டு ரயில்களில் எழுதப்பட்டுள்ளது. அய்யன் திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய 1330 குரல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளை தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்களும் படித்து வருகின்றனர். சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் குரல் மண்டபத்தில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக மக்கள் கொண்டாடும் வள்ளுவருக்கு குமரி கடலில் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. வள்ளுவரின் குரல்கள் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ளது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரான்ஸ் நாட்டு ரயில்களிலும் திருக்குறள் எழுத்தப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? 

பிரான்ஸ் நாட்டு ரயில்களில் பிரெஞ்சு மொழியில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில் திருவள்ளுவரின் பெயர் எழுதப்பட்டுள்ளது.

 

புகைப்படத்தில் உள்ள குறள் இது தான்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி


விளக்கம்: 

திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஔி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.


பிறப்பு அன்னையால்!   
சிறப்பு கல்வியால்!  
பெருமை தமிழன் என்பதால்! 


மனித வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்தும் தமிழ் எழுத்துக்கள் "அ" முதல் "ஆய்த எழுத்து" வரை

மனித வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்தும்  தமிழ் எழுத்துக்கள் "அ" முதல் "ஆய்த எழுத்து" வரை
"அ, ஆ"
முதல் இரண்டு எழுத்துக்களான, "அ, ஆ" மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "அ.......ஆ!" என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கிறது.

"இ, ஈ"
பாலகன் இளைஞனாகி/இளைஞியாகி வாலிப முறுக்கில், பெண்ணின்/ஆணின் மையலில் அசடாகி, "இ........ஈ........!" என்று இளிக்கின்றான்/இழிக்கின்றாள்."உ, ஊ"
தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், "உ....... ஊ...... ம்......" இது தானா? என்று புதிரை புரிந்துக் கொள்கிறான். 

'ஊ' - வின் முதுகில் ஏறியிருக்கும், 'ள' குடும்பச் சுமைக் குடியிருப்பதைக் காட்டுகிறது.

"எ, ஏ"
அடுத்து, குடும்பத் தலைவனாக, "எ...... ஏய்!" என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.

"ஐ"
மகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, "ஐ" என்று உட்கார நேரிடுகிறது.

"ஒ, ஓ"
மகன், இளம் மனைவியின் பேச்சைக் கேட்டு தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், "ஒ....... ஓ......!" அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா! என்று அங்கலாய்க்கிறார்.

"ஒள"
பெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்றாகிவிடுகிறார். "ஒள" வில் உள்ள 'ள' போல.
    .
".   ."
எதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, "முக்தி" பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆய்த எழுத்து  உணர்த்துகிறது.


மனிதனின் வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை  விவரிப்பதனால் தான் இந்த எழுத்துக்கள் அனைத்தும் உயிர் எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.


"ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் மொழிக்கு மட்டுமே உண்டு""ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் மொழிக்கு மட்டுமே உண்டு"

தமிழ்  மொழியில் நேர் வாக்கியத்தில் உள்ள எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன்அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டானத்  தனிச் சிறப்பு.

உதாரணம்:வேறு  எந்த மொழியிலும் இவ்வாறு சொற்களை மாற்றினால் அதன் பொருள் மாறும்.

உதாரணம்:

 Saturday, July 26, 2014

"தமிழர்களின் விஞ்ஞான அறிவு வியப்பிற்குரியது"

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு.

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
 


தமிழனின் அறிவியல் ஞானம் உலகே வியக்கத்தக்கது".

"தமிழர்களின் பண்பாட்டு பழக்கவழக்கங்களும், தத்துவ விளக்கங்களும்"

1. "திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணக் காரணம்"கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

2. நெற்றியில் குங்குமம் வைப்பதன் காரணம்மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது

மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்

வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்

உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி "நம் தமிழ் மொழி"

உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி "நம் தமிழ் மொழி"
 
உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம் என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் ( படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம்) உள்ளடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது. 

நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" என்பதில் உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாகும்.
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !

"தமிழன் என்று சொல்லடா!"
"தலை நிமிர்ந்து நில்லடா!"


Thursday, July 24, 2014

"செம்மொழியான நம் தமிழ் மொழிக்கான ஆதாரங்கள்"


"செம்மொழியான நம் தமிழ் மொழிக்கான ஆதாரங்கள்"

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர்.

1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்
2.
நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
3.
செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
4.
இலக்கியச் சான்றுகள்
5.
வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6.
பழைய நாணயங்கள்
7.
அரசு சாசனங்கள்
8.
அரசர்களின் ஆவணங்கள்
9.
கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10.
கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

அவசியம் காணொளியைக்  காணுங்கள்.
"நான் தமிழன் என மார்தட்டிக் கொள்ளத் தோன்றும்"
 
Monday, July 21, 2014

"உலகின் சிறந்த மொழி தமிழ் என்பதற்கான சான்று"

"உலகின் சிறந்த மொழி தமிழ் என்பதற்கான சான்று"


சீனப் பெருஞ்சுவரின் நுழைவாயிலில் 
"பாளையகாரர்கள் நுழைவாயில்" 
என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும்.


கனடா பாராளுமன்றத்தில் 
தமிழ் மொழியில் பாராளுமன்றம் 
என்பது பொறிக்கப்பட்டிருக்கும்.  


உயரமான  நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ் மொழியில் நீர் வீழ்ச்சியின்
பெயர் இடம் பெற்றிருக்கும்.


ரஷ்ய அதிபர் மாளிகையில்
தமிழ் மொழியிலும் மாளிகையின்
பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.


1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா 
என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின் மிக பெரிய 
சொத்தான திருக்குறளை நாம் 
எடுத்து வந்தாகி விட்டது. 
இனிமேல் அது வெறும் மண்தான். 
ஆகவே அது நமக்கு தேவை 
இல்லை என்று கூறினாராம்.


உலகில்  பைபிளுக்கு அடுத்தப்படியாக 
அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்ட
நூல், வள்ளுவன் வடித்து தந்த "திருக்குறள்".


"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!"
"தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!"


Saturday, July 19, 2014

"அ" என்ற எழுத்தில் பத்து எண்களும் அடங்கும் தத்துவம்

"அ" என்ற எழுத்தில் பத்து எண்களும் அடங்கும் தத்துவம்

பத்து எண்களும் ஓர் எழுத்தில் அடங்கிய ஒரே மொழி "தமிழ் மொழி".

"தமிழனாக இருப்பதில் பெருமிதம் கொள்வோம்"

"தமிழின் தொன்மைச் சிறப்பு"

"தமிழின் தொன்மைச் சிறப்பு"

உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்
“படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும்  காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் “தமிழ் மொழியே உலகின் முதல் மொழி” எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் “இலத்தின்”, “கீரிக்” மொழிகளுக்கு முந்திய மொழி” எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே
தமிழில் “நற்றிணை” என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்
கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர். அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி “ரைஸ்” எனவும், மயில் தோகை “டோ கை” எனவும், சந்தனம் “சாண்டல்” எனவும்,  தேக்கு “டீக்கு”, எனவும் கட்டுமரம் “கட்டமாரன்” எனவும் , இஞ்சி “ஜிஞ்சர்” எனவும், ஓலை “ஒல்லா” எனவும் கயிறு “காயர்” எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்?? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும். மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே…