Wednesday, January 21, 2015

உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்


உலக அளவில் பல நாடுகளின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது. இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதேபோல், நம்பகத்தன்மை குறைந்து வரும் நாடுகளாக ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. பிரேசில், மலேசியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் நியூட்ரல் நாடுகளாக கருதப்படுகிறது. 


டிரஸ்ட் இண்டக்ஸ் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பொதுமக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை 50 சதவீதத்திற்கும் கீழேயே உள்ளது. உலகில் உள்ள 3-ல் ஒரு பங்கு நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 2-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததே காரணம் என்பதை இந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, அரசியல் தலைவர்களின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை 82 சதவீதமாக இந்தியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய உச்சத்தை இந்தியா எட்டியுள்ளது.


1 comment :