Saturday, August 16, 2014

பிரசவம் - மன வலிமை தரும் நம் தமிழர் பாரம்பரியங்கள். . .

பிரசவம் - மன வலிமை தரும் நம் தமிழர் பாரம்பரியங்கள். . .

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் தமிழர் பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.


மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.


இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஏன் கண்ணாடி வளையல் அணிவிக்கிறார்கள்?

பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிக்கு வரும் எல்லா வயது பெண்களுக்கும் வளையல்கள் அடுக்குவது தான்.


கண்ணாடி வலையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை அருள் நிரம்பியுள்ளன. வளையல்கள், சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன.

கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.

வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்ட பார்வையையும் (திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது.

வலையலின் மூலமாக அணியும் பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது.


பச்சை நிறக் கண்ணாடி வலையலில் உள்ள சாத்வீகத் தன்மையும் உலகாளும் அன்னையின் பாதுகாப்பும் அரணாக சூழ்ந்து சேர்ந்து மனிக்கட்டிலும், விரல்களிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, தீய சக்திகளிடமிடருந்து பெண்களைக் காப்பாற்றுகின்றன.

சிகப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும், நல்லனவற்றை அதிகம் கிரகிக்க கூடிய சக்தியையும் கொண்டது.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.


நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

Friday, August 15, 2014

உலகிலேயே ஒரு மொழிக்கு கடவுள், முனிவர், மூதாட்டி, மலை மற்றும் தாத்தா உண்டு என்றால் அது தமிழுக்கு மட்டுமே!


உலகிலேயே ஒரு மொழிக்கு கடவுள், முனிவர், மூதாட்டி, மலை மற்றும் தாத்தா உண்டு என்றால் அது தமிழுக்கு மட்டுமே! 

தமிழின் சகோதர மொழியான சமஸ்கிருதத்திற்கும் கூட கடவுள் கிடையாது.

தமிழுக்கு பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கிற்கும் கடவுள் கிடையாது. 

பாலி, மான்டிரின், ஹிந்தி, இங்கிலிஷ்க்கும் இதே கதி தான். 

அவர்கள் மொழியில் கடவுளைப் பற்றி பேச முடியும் அவ்வளவே!

எந்த மொழியும் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, அந்த மொழிக்கு தலைவனாக ஒரு கடவுள் இல்லை என்பது தான். தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

தமிழின் கடவுள்: முருகப்பெருமான்

தமிழ் முனிவர்: அகத்தியர்

தமிழ் மூதாட்டி: ஒளவையார்

தமிழ் மலை: பொதிகை மலை


தமிழ் தாத்தா: உ.வே.சாமிநாதய்யர்.



தமிழ் எங்கள் பேச்சு!
தமிழ் எங்கள் மூச்சு!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.............!


உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படி? காற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?




காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன். உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.


கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.


ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தைக் குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்த போது ஆமைகள் ஓசியன் கிர்றேன்த்ஸ் (ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது.

இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின் தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.



இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.


இதே போல் தென்பசிபிக்மாக் கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவித்தனர்.

பல்லவர்களின் வணிக நாணயத்தில் கப்பல் பொறிக்கப்பட்டுள்ளது.  


நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களே உள்ளன.




Thursday, August 14, 2014

தமிழ்ப் பண்பாட்டில் இரண்டறக் கலந்த ஒன்று "மஞ்சள்"!

தமிழ் பெண்களின் பழக்கவழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று முகத்திற்கு மஞ்சள் பூசுவது. 

மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுப் பெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திருநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று, மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழ்ப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.


மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால் அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.


மருத்துவகுணம்

மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.
மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கொல்லப்படும் வைரஸ்

மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மகிமை

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகு தரும் மஞ்சள்

அ. தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

ஆ. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.

இ. பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.

ஈ. எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

உ. பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.

ஊ. சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

எ. தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.

ஏ. மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்….! 

ஐ. முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.


மஞ்சள் பூசுங்க!

இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்..

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். 


பண்டைய காலத்திலேயே எந்த படிப்பும் இல்லாமல் நிபுணனாக வாழ்ந்தவன் தமிழன்....!!!





Wednesday, August 13, 2014

எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?

கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?


மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.


மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.


பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.


பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
  

தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.

அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது..........!

அதனால் தான் தமிழர்கள் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக்காத்தனர்.