Friday, October 31, 2014

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே.............!

பாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம் தமிழரே. இன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இனக்கள் எல்லாம் நமக்கு பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே..,!

மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.

இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய் விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களுடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.


இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்வுக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

Thursday, October 30, 2014

தமிழகத்தின் பெருமைகள்


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிர காரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/ km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)….


Monday, October 6, 2014

கொய்யாவின் மருத்துவ குணங்கள்.......

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.


வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

*  
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

*  
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

*  
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

*   
கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

*   
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

*  
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

*  
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

எவ்வாறு சாப்பிடவேண்டும்?

*  
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

*
நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

*  
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

*  
கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Sunday, October 5, 2014

2880 - ம் ஆண்டு மார்ச் 16 - ம் தேதி பூமிக்கு இறுதி நாள்.

உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுப்பட்டார். ‘கடவுளை’ 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, ‘கடவுள்’ இருப்பது உண்மை தான்!! பிரையன் காக்ஸ் பிபிசியுடன் இணைந்து உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி. 


இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம். 

இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார். சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும். இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியாக உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார். 

பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும். இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான். எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. 

அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ்.  இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான். கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது. 

2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது. இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை. வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு. இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன. இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்! 

சாவு வீட்டிற்கு போய் வந்தவுடன் ஏன் கட்டாயம் குளிக்க வேண்டும்?


நமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தெரிந்தவர்களோ என யாராவது இறந்து விட்டால் அவர்கள் இறுதி சடங்குக்கு சென்று விட்டு குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வருவோம் . இது பண்டைய கால பழக்கம். வெளியில் ஆறு ஏரி போன்றவை இருந்ததால் அங்கு குளித்து விட்டு வருவார்கள். 

பெண்கள் வீட்டின் பின்பக்கமாக உள்ளே வந்து அங்கே குளித்து விட்டு உள்ளே வருவார்கள். இது இன்றைய காலத்தில் சாத்தியம் இல்லாமல் போனது. ஆனால் யாரும் சாவு வீட்டுக்கு போய் விட்டு குளிப்பதை நிறுத்திவிட வில்லை. வீட்டுக்குள் வந்தவுடன் யாரையும் தொடாமல் முதல் வேலையாக குளிக்க தான் செல்கிறார்கள். 

இந்த வழக்கத்தை ஏன் கடைப்பிடிக்கிறார்கள். உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம். ஒருவர் இறந்தவுடன் அவரது உடலில் இருந்து பல ஆயிரம் விஷ கிருமிகள் வெளியேறும். இது அங்கு சென்று இருக்கும் நம்மை தாக்கும் . இதனை உடனடியாக அப்புறபடுத்த வேண்டும். இல்லையெனில் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காக தான் சாவு வீட்டில் இருந்து வந்தவுடன் குளிக்கிறார்கள். 

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நமக்கு நெருங்கியவர்கள் இறந்துவிட்டால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டு உடலளவில் சோர்வு அடைவோம். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நாம் புத்துணர்ச்சி பெறுவோம். அதற்காகவும் குளிக்க சொல்கிறார்கள். இதனை வெளிப்படையாக சொன்னால் யாரும் குளிக்க மாட்டார்கள். 

அதனால் தான் நம் முன்னோர்கள் , பேய்கள் பிடித்து கொள்ளும் என நம்மை பயமுறுத்தி நம்மை குளிக்க வைத்தார்கள். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிளும் பல காரணங்கள் உள்ளது. நாம் தான் அதனை சரியாக புரிந்து கொள்வது இல்லை.

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!


1. சாலையில் எச்சில் துப்புதல் :


இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றைக் கணக்கெடுத்தால் நான்கு ஜென்மங்கள் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.
3. குப்பைகளை கொட்டுவது :
நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.


4. வரிசையை முந்தியடித்தல் :


இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.
5. விட்டுகொடுக்காத பழக்கம் :
அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.


6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.
7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:
நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.


8. ஜாதி வெறி- மத வெறி – இன வெறி:

அனைவரும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்உடனே கையால் நீவிவிடுஎன்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானாநாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமாஎன்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ்செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.