இந்தியாவின் சுதந்திர வரலாறுகளை சொல்லும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரமாய் கம்பீரமாய் நிற்கிறது வேலூர் கோட்டை.
தமிழகத்தில் கற்கோட்டைக்குப் பெயர்போன இடம் வேலூர். 448 ஆண்டுகளுக்கு முன்னால் குறுநில மன்னர் ஒருவரால் இங்கு கட்டப்பட்ட இந்த கோட்டை இன்றளவும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் அளித்து வருகிறது.
தமிழகத்தில் கற்கோட்டைக்குப் பெயர்போன இடம் வேலூர். 448 ஆண்டுகளுக்கு முன்னால் குறுநில மன்னர் ஒருவரால் இங்கு கட்டப்பட்ட இந்த கோட்டை இன்றளவும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் அளித்து வருகிறது.
இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் கீழ் இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது. ஜலகண்டேஸ்வரர் கோவில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், முத்து மண்டபம், புகழ் பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இந்த கோட்டை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த கோட்டையின் வெளிச்சுவரானது பிரம்மாண்ட கிரானைட் பாறை கட்டமைக்கப்பட்டிருப்பதோடு அதனை ஒட்டியே அகலமான அகழி ஒன்றும் காணப்படுகிறது. சூர்யகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்த அகழிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.
திப்பு மஹால் எனும் பிரசித்தமான அரண்மனை இந்த கோட்டைக்குள் அமைந்துள்ளது. திப்பு சுல்தான் மன்னர் தனது குடும்பத்தாருடன் இந்த அரண்மனையில் வசித்ததாக சொல்லப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் பல ராஜவம்ச அரசியல் கைதிகளை இந்த அரண்மனையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். கண்டி மன்னர், விக்கிரம ராஜசிங்கர் மற்றும் திப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆகியோர் இங்கு அடைக்கப்பட்டிருந்துள்ளனர்.
சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே தேசிய வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சுற்றுலா அம்சமாக வேலூர் கோட்டை வீற்றிருக்கிறது.
வேலூர் கோட்டையில் சர்வ மதம் :
கோட்டைக்குள் நுழைந்ததுமே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது.
கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம்.
அதேபோல் தென்னிந்தியாவின் முதல் அரபுக்கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது.
உண்மை.... இது ஒரு அபூர்வம், அனைத்து மத அடையாளங்கலும் உள்ளன....
ReplyDeleteithil athikapadiyana thavarukal ullana
ReplyDelete