Wednesday, September 10, 2014

"தமிழ் விழுமியங்கள்" வலைப்பூவின் 50வது படைப்பு!

"தமிழ் விழுமியங்கள்" வலைப்பூவின் 50வது படைப்பு!

"விழுமியம்" என்ற சொல்லின் பொருள் "மதிப்புகள்"

"தமிழ் விழுமியங்கள்" வலைப்பூ உருவாக்கத்தின் முக்கிய நோக்கம் "தமிழ் மற்றும் தமிழர்களின் மதிப்புகளை" உலக தமிழர்கள் அனைவரும் அறிய செய்வதேயாகும். தமிழ் விழுமியங்கள் வலைப்பூ பிறப்பிற்கு முக்கிய காரணி உலகத் தமிழ் இணைய மாநாடு. மாநாடு ஒருங்கினைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்!

தமிழரின் எண்ணங்கள், நம்பிக்கைகள், கருத்துகள், அறிவியல் சார்த்த புலமைத் திறன் , பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கல்வியியல் அறிவு, பாரம்பரிய உணவு முறைகள், உடைகள், கண்டுப்பிடிப்புகள், கட்டுமானக் கலைத் திறன், வீரம் என அனைத்தையும் தமிழ் விழுமியங்கள் வலைப்பூவில் வெளியிட்டு அதை பலர் அறிய செய்ததினால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இளமையிலிருந்தே தமிழின் மீது எனக்கு இருந்த பற்றின் மூலம் தமிழர்களின் சிறப்புகளை பலர் அறியச் செய்வதற்கான ஆர்வம், தேடல் அதிகமாகியுள்ளது. தமிழ், தமிழர்களின் மதிப்புகளை எடுத்துக் கூறும் இப்பணியைத் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.







2 comments :