Saturday, November 22, 2014

தமிழரின் அறிவியல் : விடுகதை

ஒருவரின் நுண்ணறிவை ஒருவர் அறிவதற்கு எழுப்புகின்ற புதிர்களே விடுகதைகள் எனப்படும். ஏட்டில் எழுதப்பெறாத இலக்கியம் என்று விடுகதைகளைக் கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விடுகதைகள் போடுவதைக் காணலாம்.இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவார்கள். பொதுவாக விடுகதைகள் இரண்டு வகையாக அமைந்துள்ளன. ஒன்று கவிதை நடையில் அமைந்துள்ளவை; மற்றொன்று உரைநடையில் அமைந்தவை. மக்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் விடுகதைகள் பெரிய அளவில் காட்டுகின்றன.சில விடுகதைகள் எதுகை - மோனையுடன் அழகான சொல்லாட்சி பெற்று விளங்குகின்றன. 


எல்லாக் காலங்களிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்டின்புறும் வகையில் அமைந்திருப்பது விடுகதைகள் ஆகும். குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஓய்வு நேரத்தில் விளையாட்டாக விடுகதை போட்டுப் பாருங்களேன்...ஒரே மகிழ்ச்சியலை எழும்பும். இங்கே சில விடுகதைகள். 

1. அகத்தில் அகம் 
சிறந்த அகம். 
அது என்ன அகம்

2. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி 
அது என்ன

3. குட்டைப் பெண்ணுக்குப் 
பட்டுப் புடவை. 
அது என்ன

4. ஆயிரம் தச்சர் கூடி 
அழகான மண்டபம் கட்டி 
ஒருவன் கண்பட்டு 
உடைந்ததாம் மண்டபம். அது என்ன


விடை தெரிந்தால் பதில் போடுங்கள்; வீட்டில் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்

Friday, November 21, 2014

தமிழரின் மருத்துவம் : வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்


(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.) இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய்களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும். இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

Thursday, November 13, 2014

வியக்க வைக்கும் தமிழ் எண்ணியலின் சிறப்பு!

தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள். ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது. தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.


இந்து-அரேபிக் (INDO-ARABIC), ரோமன்(ROMAN) எண்களை பற்றி சொல்லிக்கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக்கொடுக்க தவறிவிட்டது. தமிழர் எண்ணியல் தமிழ் மக்களுக்கு சேரும் வண்ணம் இனி வரும் சந்ததியினருக்குத் தமிழ் எண்கள் குறித்து சொல்லிக் கொடுப்போம்

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்!................

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனை உள்ளது, அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என நினைக்கையில்,


 1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )

1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )

1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )

1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )

1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )


சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)


இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தால் 
180 km/hr 

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே, 


180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .


45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை


எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.


இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

தமிழரின் அறிவியல் : சுவாசித்தல் முறையும் ஆயுளும்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,


100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

தமிழரின் இயற்கை மருத்துவம்!!!!!...............


1.மார்புச் சளி
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.