நல்லியக்கோடன் என்னும் மன்னன் முருக பக்தனாக இருந்தான். அறவழியில் ஆட்சி செய்த அம்மன்னன் மீது பொறாமை கொண்ட பகை மன்னர்கள் படையெடுத்து வருவதாக செய்தி வந்தது. மனவருத்தத்தோடு, முருகனுக்குரிய இரவு நேர பூஜையை முடித்து விட்டு படுக்கைக்குச் சென்றான்.
கனவில் தோன்றிய முருகன், நல்லியக்கோடா!
யாமிருக்க பயமேன்! கேணியில் பூத்திருக்கும் தாமரை மலரே உனக்கு ஆயுதம்! வெற்றி உன்
பக்கமே! என்று வாழ்த்தி மறைந்தார்.கண் விழித்தான் மன்னன். மீண்டும் அவன்
கண்களுக்கு துõக்கம்
வரவில்லை. பொழுது புலர்ந்ததும், தாமரைகள்
பூத்திருக்கும் கேணிக்குச் சென்றான். அங்கிருந்த மலரைப் பறித்து பகைவர் மீது
வீசியெறிந்தான். அது வேலாக மாறி பகைவர்கள் வந்த திசை நோக்கிப் புறப்பட்டது.
செய்வதறியாமல் திகைத்த அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.
வேல் எறிந்து வென்ற ஊர்
என்பதால், நல்லியக்கோடன்
ஆட்சி செய்த ஊருக்கு வேலூர் என்ற பெயர் வந்தது. திறல்வேல் நுதியில் பூத்தகேணி
விறல்வேல் வென்றி வேலூர் என்று இவ்வூர் பற்றி, சிறுபாணாற்றுப்படை
என்னும் தமிழ் இலக்கியம் கூறுகிறது. இந்த மன்னன் தான் பெற்ற வெற்றிக்கு நன்றி
செலுத்தும் விதத்தில் பொன்னால் ஆன
பதக்கம், ஆபரணங்களை முருகப்பெருமானுக்குச் சூட்டி
மகிழ்ந்தான்....
No comments :
Post a Comment