உலகில் எப்பொழுது மனித இனம் தோன்றியதோ அப்பொழுதே தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழி.
இதை,
"கல்த் தோன்றி மண்த் தோன்றாக் காலத்தே தோன்றிய
மூத்தக் குடி நம் தமிழ் குடி"
உலகில் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் பலவேறு மொழிகள் பேசப்பட்டாலும் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
“ | வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18) | ” |
“ | இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) | ” |
“ | இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38) | ” |
“ | சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) | ” |
இந்தச் சின்னத்தில் அடங்கியவைகள்:
அ. கன்னியாகுமரியிலுள்ள 131 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை
ஆ. தமிழ்நாடு அரசு பறவை : மரகதப் புறா
இ. தமிழ்நாடு அரசு மரம் : பனை மரம்
ஈ. தமிழ்நாடு அரசு கோபுரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்
உ. தமிழ்நாடு அரசு மலர் : செங்காந்தள் மலர்
ஊ. முத்தமிழைக் குறிக்கும் இயல், இசை மற்றும்
நாடகம் (வீணை, மங்கையின் பரதநாட்டியம்)