மனித வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்தும் தமிழ் எழுத்துக்கள் "அ" முதல் "ஆய்த எழுத்து" வரை
"அ, ஆ"
முதல் இரண்டு எழுத்துக்களான, "அ, ஆ" மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "அ.......ஆ!" என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கிறது.
"இ, ஈ"
பாலகன் இளைஞனாகி/இளைஞியாகி வாலிப முறுக்கில், பெண்ணின்/ஆணின் மையலில் அசடாகி, "இ........ஈ........!" என்று இளிக்கின்றான்/இழிக்கின்றாள்.
"உ, ஊ"
தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், "உ....... ஊ...... ம்......" இது தானா? என்று புதிரை புரிந்துக் கொள்கிறான்.
'ஊ' - வின் முதுகில் ஏறியிருக்கும், 'ள' குடும்பச் சுமைக் குடியிருப்பதைக் காட்டுகிறது.
"எ, ஏ"
அடுத்து, குடும்பத் தலைவனாக, "எ...... ஏய்!" என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.
"ஐ"
மகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, "ஐ" என்று உட்கார நேரிடுகிறது.
"ஒ, ஓ"
மகன், இளம் மனைவியின் பேச்சைக் கேட்டு தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், "ஒ....... ஓ......!" அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா! என்று அங்கலாய்க்கிறார்.
"ஒள"
பெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்றாகிவிடுகிறார். "ஒள" வில் உள்ள 'ள' போல.
.
". ."
எதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, "முக்தி" பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆய்த எழுத்து உணர்த்துகிறது.
மனிதனின் வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை விவரிப்பதனால் தான் இந்த எழுத்துக்கள் அனைத்தும் உயிர் எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
No comments :
Post a Comment