Saturday, July 26, 2014

"தமிழர்களின் பண்பாட்டு பழக்கவழக்கங்களும், தத்துவ விளக்கங்களும்"

1. "திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணக் காரணம்"



கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

2. நெற்றியில் குங்குமம் வைப்பதன் காரணம்



மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது

மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்

வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்

No comments :

Post a Comment