Monday, August 4, 2014

என்ன கொடுமை? 177 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உலக அதிசயப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அனால் வெறும் 7 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு 1000 வயதாகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சியளிக்கும் ஒரு கோவில் உலக அதிசயப் பட்டியலில் இடம் பெறவில்லை!



தமிழரின்  கட்டிடக்கலைக்கு இதை விட சிறந்த சான்று வேறு என்ன தர முடியும்?
 
கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை  கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் இராஜராஜ சோழன்.   ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சிய ளிக்கிறது அந்தக்கோவில்.  அதுதான் தஞ்சை பெரிய கோவில்.
 
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் (கி.பி 985-1014) கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 7 (1003-1010) ஆண்டுகளில்  கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !


 ஆனால்,
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது! 


சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !


"தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் இத்தகைய பெருமை சேர்த்த இராஜராஜ சோழனுக்கு எனது வீர வணக்கங்கள்"

தமிழ் குடியில்ப் பிறந்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ!

2 comments :

  1. தமிழர்களுக்கு எங்கும் என்றும் மதிப்பு இல்லை என்பதை நன்றாக உணர்த்துகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆம்! தமிழின் தொன்மையை, சிறப்பை தமிழர்களாகிய நாம் உலகறியச் செய்து அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கிட வேண்டும்.

      Delete