Saturday, August 30, 2014

"ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? 

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? 

அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது.


No comments :

Post a Comment