Friday, August 1, 2014

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்"

தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது.

முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே!

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது….

"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ......

அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், பத்து மாதம் கழித்து உயிர்,மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர்.

அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது.


அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் )
 

-அதாவது உடலையும் ,உயிரையும் இணைத்து கொடுப்பவர்
"அம்மா " 


 

3 comments :

  1. மிகச்சிறந்த ஆய்வு!!!!!!!!!!!!!!!!!!! தொடரட்டும்

    ReplyDelete
  2. Ungala paraata vaarthaigal illai thozhi

    ReplyDelete