Sunday, August 3, 2014

'உயிருள்ளவரை தமிழுக்கு குரல் கொடுப்பேன்' - தருண் விஜய் எம்பி

'உயிருள்ளவரை தமிழுக்கு குரல் கொடுப்பேன்' - தருண் விஜய் எம்பி

டெல்லியில் ஜூலை  31ஆம் தேதி: 

இந்தி, ஆங்கிலம் எல்லாம் தமிழின் பேரப்பிள்ளைகள். அப்படியிருக்கையில் இந்த மொழிகளுக்கு இரையாகி இன்று பல தேசிய இனங்கள் தங்கள் அடையாளத்தையும், தாய் மொழியையும் இழந்து வருகின்றது. குறிப்பாக உலகின் மூத்த இனமான தமிழினம் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வடநாட்டு எம்.பி தருண் விஜய், தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி அலுவல் மொழியாக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

உயிருள்ளவரை தமிழுக்காக் குரல் கொடுப்பேன் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார்.

ஜூலை 31ஆம் தேதி மாநிலங்களவையில் தமிழ் மொழியின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய தருண் விஜய், தமிழை வட மாநிலங்களில் விருப்பப் பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதியை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் மீது இத்தனைப் பற்று கொண்டுள்ள தருண் விஜய், தன் தமிழ்ப் பற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறியுள்ளார்:
 
"உலகின் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை எனது வாழ்வின் சிறந்த தவமாகக் கருதுகிறேன். அந்த அளவுக்கு தமிழையும், தமிழ் படைப்புகளையும் நான் காதலிக்கிறேன்.

நான் தமிழ் மீது கொண்டுள்ள ஈர்ப்பு, நான் வாழும் காலத்தில் அதற்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எனது விருப்பத்துக்கு எந்தத் தடையும் யாரும் விதித்ததில்லை. அதனால், உயிருள்ளவரை தமிழுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்!
வட மாநில மக்கள் தமிழைக் கற்க வேண்டும். தமிழ் மொழியில் உள்ள சிறப்புகளை அறிய வேண்டும் என்பதே என் ஆசை. தமிழ் மக்களை இந்தி கற்கச் சொல்லும் முன், வட மாநிலத்தவர் தமிழ் கற்க ஆரம்பிக்க வேண்டும், என்பதுதான் நான் சொல்வது," என்றார்.


தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வடநாட்டு மாநிலங்களில் தமிழை பாடமாக படிக்க, தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழனே உன் மொழியின் பெருமைகளைக் காக்க நீ என்ன செய்ய போகிறாய்?

"தமிழா  வித்தெழு!
தமிழ் மொழியின் பெருமையைப் பேணிக் காத்திடு !"



No comments :

Post a Comment