Saturday, August 9, 2014

தமிழர்களின் கட்டுமான கலை மற்றும் சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த சான்றுகள்

அ. நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம்... !!! 

தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000
ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது.... !!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய
கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை... !!
 

இந்த வரலாற்று பொக்கிஷமான "தஞ்சை கோவிலை", "உலக அதிசயமாக" அறிவிக்கப்படவேண்டும்.

ஆ. ராஜஸ்தானில் உள்ள அபனேரி என்ற கிராமத்தில் 1200 வருசத்துக்கு முன்பு கட்டிய இந்த "சான்ட் ஃபோரி" என்னும் படிக்கட்டு கிணறு....

இந்த கிணறு 3500 படிகளை கொண்டது.


  

இ. சிற்பக்கலையின் உச்சம் இந்த சிலை.

உலகில் நம் தமிழர்கள் போன்று கலைகளில் சிறந்தவர்கள்..யாரேனும் உண்டா...?

இந்த சிற்பத்துக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா..?



இடம் : ஆயிரங்கால் மண்டபம்,மதுரை

இவ்வளவு நுணுக்கமாக செதுக்க எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பார்.


ஈ. ஆயிரங்கால் மண்டபம்

தமிழர்களின் பெருமைக்குறிய கட்டிடக் கலைகளில் ஒன்று இந்த ஆயிரங்கால் மண்டபம். மற்ற மண்டபங்களில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள்  ஆயிரங்கால்மண்டபத்தில் காணலாம்.


உ. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத்  தூண்கள்
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து,
அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த 
ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " " ,ரி,,,,,நி" என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று   தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட  சங்கீதமும்.அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம்கடம், சலங்கைவீணைமணி போன்ற இசைக்கருவிகளின்இசையை தருகின்றது.



அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு 
இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை
அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போதுஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல்இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர்இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது.


நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால்இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென  ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.


"தமிழனின் தடையங்கள் என்றும் நிலைக்கும்!...." 


 

1 comment :